கருப்பு பட்டை அணிந்து ஆடும் பாகிஸ்தான் அணி - அட கடவுளே., இதான் காரணமா?!  - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2022 : டி20 கிரிக்கெட் தொடரின் இன்று இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற ஆட்டம் என்றாலே இருநாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாகவே அமையும்.

தற்போது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம், ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே நடக்கிறது. இந்த காரணமாக கூட, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் பலத்த எதிர்பார்ப்புடன் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்றைய ஆட்டமும் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆடி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத தற்போது கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மழை வெள்ளத்தில் சிக்கி 6.80 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். 

சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் உள்ளனர். 100க்கும் அதிகமானோர் பலியானதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆடி வருகின்றனர்.

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான். 

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா. தஹானி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

asia cup ind vs pak Pakistan players black page


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->