இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த மெஹதி ஹாசன்.. 272 ரன்கள் இலக்கு.. வெற்றி யாருக்கு.?
Bangladesh target of 272 runs against India
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.
இதில் முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஷபாஷ் அகமது மற்றும் குல்தீப் சென் வெளியேற்றப்பட்டு அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறங்கினர்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி 18.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களுக்கு தவித்திருந்த நிலையில், இதில், 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹந்தி ஹாசன் - முஹம்மதுல்லா ஜோடி 133 ரன்கள் எடுத்தது. இதில், 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மஹமதுல்லா இம்ரான் மாலிக் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனையடுத்து கடைசியில் அதிரடியாக விளையாடிய மெஹதி ஹாசன் 83 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக 2வது ஓவரிலே வெளியேறியதால், அவர் பேட்டிங் செய்யமாட்டார் என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.
English Summary
Bangladesh target of 272 runs against India