சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி..!! பிசிசிஐ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி தற்பொழுது மேற்கொண்டுள்ள வங்காதேச சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு இந்தியாவில் 9 ஒரு நாள், 6 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை இலங்கைக்கு எதிரான தொடரில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதேபோன்று பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை 4 டெஸ்ட்கள், 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்த மூன்று தொடர்களிலும் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டி மட்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI announced India Australia ODI at Chennai Chepakkam Stadium


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->