குத்துச்சண்டை வீராங்கனைக்கு இந்திய ராணுவத்தில் வேலை! - Seithipunal
Seithipunal


மிஷன் ஒலிம்பிக் மூலம் ராணுவத்தில் இணையும் இரண்டாவது வீராங்கனை!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22 ஆவது காமன்வெல்த் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா வெண்கலம் பதக்கம் வென்றிருந்தார். இதன் காரணமாக மிஷன் ஒலிம்பிக் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் இவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் "காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஜோஸ்மின் லம்போரியா இந்திய ராணுவத்தின் மிஷன் ஒலிம்பிக் திட்டத்தின் கீழ் ராணுவ காவல் படையில் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020, மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், மகளிர் உலக கோப்பை சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஜெஸ்மின் பதக்கங்களை வென்றுள்ளார். 

சுபிதாரர் நீரஜ் சோப்ரா, நைப் சுபேதார் ஜெர்மி, அவினாஷ் சேபிள் போன்றோர் மிஷின் ஒலிம்பிக் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட சில குறிப்பிட்ட தக்க விளையாட்டு வீரர்கள். ஜாஸ்மின் இந்திய ராணுவத்தின் மிஷன் ஒலிம்பிக்கில் இணைந்த இரண்டாவது தகுதி வாய்ந்த விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boxer jaismine gets job in Indian Army


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->