வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையிலான போட்டிகள் அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். புதிதாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் களமிறங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும்,  ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணத்தினால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்,  குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்

டி20 தொடருக்கான இந்திய அணி: தொடருக்கான அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல்  , யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bumrah and shami have been rested from wi series


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->