உலக செஸ் தரவரிசை பட்டியல்; 03-வது இடத்துக்கு முன்னேறிய சாம்பியன் குகேஷ்..!
Champion Gukesh moves up to 03rd place in the world chess rankings
உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டது. இந்த பட்டியலில், முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி) முதல் இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) 02-ஆவது இடங்களில் தொடருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் (18) (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 02 இடம் முன்னேற்றம் கண்டு 03-வது இடத்தை பிடித்துள்ளார். இது குகேஷின் சிறந்த தரநிலையாகும்.

அடுத்ததாக சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 08-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டாப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
அத்துடன், செஸ் வீராங்கனைகள் தரவரிசையில் இந்தியாவின் கோனேரு ஹம்பி (2,528) 06-வது இடத்திலும், ஆர்.வைஷாலி (2,484) 14-வது இடத்திலும், ஹரிகா (2,483) 16-வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Champion Gukesh moves up to 03rd place in the world chess rankings