சாம்பியன்ஸ் டிராபி: குண்டு போடுறாங்க... போர் விமானங்களால் பதற்றமடைந்த நியூசிலாந்து வீரர்கள், ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின், கராச்சியில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க போட்டியில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின.

இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஏற்பாடு செய்த விமானப் பேரணியில், ஏழு போர் விமானங்கள் வண்ணப் புகைத் திரளை வீசி பறந்தன.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே, நியூசிலாந்து வீரர்கள் வில் யங், டெவோன் கான்வே, சில ரசிகர்களும் போலி வெடிகுண்டு தாக்குதல் போன்ற சத்தத்தால் சில விநாடிகள் பதற்றமடைந்தனர்.  

விமானங்கள் மிகவும் குறைந்த உயரத்தில் பறந்ததால், நியூசிலாந்து வீரர்கள் மேலே பார்த்து உறைய, சிலர் காதுகளை அடைத்துக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.  

இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பல நாடுகளை சேர்ந்த சில முக்கிய வீரர்களும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபையில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Champion Trophy 2025 Air Show PAK vs NZ


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->