சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி; ரூ.5000 கோடி சூதாட்டம்; நாளை வெல்ல போவது யார்..?
Champions Cup final match 5000 crore gambling
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பல பரிட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், இந்த இறுதி போட்டிக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
இதுவரை இந்த தொடரில் இந்திய அணி தோல்விகளை சந்திக்கவில்லை. இந்நிலையில் நாளை துபாயில் நடக்க உள்ள இறுதி போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், இந்தியா கோப்பை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அத்துடன், இந்த இறுதி போட்டிக்கு சூதாட்டக்காரர்கள் அதிகளவு பணம் கட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமான அணியாக இந்தியா உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனவும், அதில், ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் நடக்கும் இந்த சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டுள்ளது எனவும் மற்றுமொரு அதிர்ச்சி தகவலும் செய்திகளில் வெளியாகியுள்ளது.

இந்த சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டில்லியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் அளித்துள்ள தகவல் அடிப்படையில், தற்போது துபாயிலும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சூதாட்டம் தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளத்தாக கூறப்படுகிறது.
English Summary
Champions Cup final match 5000 crore gambling