இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட உணவால் சர்ச்சையா?
Controversy on food provided by the Australian Cricket Board to the Indian team
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மெல்பர்னில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து தனது இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை சிட்னி மைதானத்தில் நாளை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய அணி நேற்று முன்தினமே சிட்னி நகரை சென்று அடைந்தது. சிட்னி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உலககோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு பயிற்சிக்கான இடங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒதுக்க வேண்டும். கிரிக்கெட் அணிகள் தங்கும் ஹோட்டல்களுக்கு அருகில் பயிற்சி எடுப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இந்திய அணிக்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பிளாக்டவுனில் பயிற்சி இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து 42 கிமீ தொலைவில் பயிற்சிக்கான இடம் இருப்பதால் இந்திய அணி செல்ல மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதேபோன்று இந்திய அணிக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய அணியின் பயிற்சிக்கு பின்னர் சாண்ட்விச்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐ.சி.சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு உணவுகளை வழங்குவதாக ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து விலகும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்னியில் நடந்த பயிற்சி அமர்வுக்குப் பிறகு வழங்கப்பட்ட உணவு குளிர்ச்சியாகவும் நன்றாக இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பி.சி.சி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Controversy on food provided by the Australian Cricket Board to the Indian team