டி20 உலக கோப்பையில் ஐசிசி அறிவித்த புதிய விதிமுறை.. மகிழ்ச்சியில் வீரர்கள்.!
Covid positive players allowed to T20 World Cup
ஐசிசி 8வது டி20 உலக கோப்பை இன்று தொடங்கி (அக்டோபர் 16 ) நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த உலக கோப்பையில் பல்வேறு விதிமுறைகள் ஐசிசி மாற்றியுள்ளது.
அந்த வகையில் கொரோனா பாதித்த வீரர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கடந்த உலகக்கோப்பையில் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா பாதித்த வீரர்களும் உலகக் கோப்பையில் விளையாடலாம் என அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டியின் முன் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படாது என்றும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு ஓய்வளிக்கப்படுவது குறித்த முடிவை அணியின் மருத்துவர் தான் எடுக்க வேண்டும். மேலும், கொரோனா பாதித்த வீரர் விளையாட வேண்டுமா? அல்லது மற்றவர்களிடம் இருந்து தனிமைபடுத்த வேண்டுமா? என்ற முழு பொறுப்பும் அணியின் மருத்துவரையே சாரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Covid positive players allowed to T20 World Cup