அடி தூள்!!! 2 மாற்றங்களுடன் களத்தில் இறங்கிய CSK !!! டாஸ் வென்று பந்துவீச்சை ....? - Seithipunal
Seithipunal


IPL 2025 18-வது சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இந்த தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எதிர்கொள்கிறது .

இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிற நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.அதுமட்டுமின்றி இந்த போட்டிக்கான சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரும், சாம் கரனுக்கு பதிலாக ஜேமி ஓவர்டானும் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

இரு அணிகளுக்கான விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் இதோ:

சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ஜேமி ஓவர்டான், ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரனா, கலீல் அகமது.

ராஜஸ்தான்: ரியான் பராக் (கேப்டன்), ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மேயர், வனிந்து ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
தற்போது விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் 7.4  ஓவர்களுக்கு,2  விக்கெட்கள் இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CSK entered field with 2 changes Won toss and elected to bowling


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->