டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்த இந்திய அணி இதை செய்தால் போதும் - கௌதம் கம்பீர்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ளார்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெற இரு நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கம்பீர், 'ஷாஹீன் அப்ரிடி சிறந்த பந்துவீச்சாளர் தான் ஆனால், அவருக்கு எதிராக விக்கெடுகளை காப்பாற்ற நினைக்காமல் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

கடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூவரையும் ஷாகின் அப்ரிடி வீழ்த்தி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டி20 போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு பலமாக இருப்பது பாபர் அசாம் - முகமது ரிஸ்வானின் சிறப்பான தொடக்க ஆட்டமாகும். இந்திய அணி இவர்களுடைய விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அந்த வகையில் இவர்களுடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்றால் தொடக்கத்தில் ஸ்பின்னர்களை பயன்படுத்த வேண்டும். தற்போது நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் கூட பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautham Gambhir Idea to indian team beat Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->