ஐபிஎல்லில் முதல் முறையாக களமிறங்கும் அயர்லாந்து வீரர்.. யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக அயர்லாந்து வீரர் ஜோஷூவா லிட்டில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலம் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது.

இந்த  ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது

மேலும், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மற்றோரு இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. 

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக அயர்லாந்து வீரர் ஜோஷூவா லிட்டிலை ரூ.4.5 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கும் முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans bought Ireland allrounder Joshua little


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->