நடுவரின் முடிவை அவமதித்து பதிவிட்ட சுப்மன் கில்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை.!
ICC fined shubman gill for troll post
உலக பெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 173 ரன்களுடன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து நேற்று கடைசி நாள் தொடங்கிய நிலையில் இந்திய வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆசிரியர்கள் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் சுப்மன் கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் இந்த கேட்ச் நாட் அவுட் என இந்திய ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வகையில் இந்திய வீரர் சுப்மன் கில் மூன்றாம் நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு 100 சதவீதம் அபராதமும், ஆஸ்திரேலிய அணிக்கு 80 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ICC fined shubman gill for troll post