அனைத்திலும் இந்தியாதான் டாப்பு!  - Seithipunal
Seithipunal


ஐசிசி தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று மொகாலியில் தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்னும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும், லபுசேன் 39 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி 5 விக்கெட்களையும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 74 ரன்னும், ருதுராஜ் 71 ரன்னும், கே எல் ராகுல் 58 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும் எடுத்தனர். 

முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் ஆட்டங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

மேலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Ranking all fumets after INDvAUS ODI Match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->