உலக கோப்பை தொடரிலிருந்து முக்கிய நட்சித்திர வீரர் விலகல்! - Seithipunal
Seithipunal


காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா 48 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள இலங்கை வீரர் 832 ரன்களும், 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

மேலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான 'லங்கா ப்ரீமியர் லீக்'கில் அதிகபட்ச ரன் மற்றும் அதிக விக்கெட்களையும் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஹசரங்கா. 

இந்நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹசரங்கா விலகியுள்ளார். 

அண்மையில் நடந்தது முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா. 

உலகோப்பை இலங்கை அணியில் ஹசரங்கா களமிறங்காமல் இருப்பது இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே காயமடைந்த இலங்கை வீரர் மதீஷா தீக்‌ஷானா விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹசரங்கா விலகல் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 Sri Lanka Team Hasaranka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->