#IPL2022 : ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் மழை குறுக்கிட்டால்.. புதிய விதிகள் அறிவிப்பு.!
If the rain interrupts the IPL play-off round New rules announced
10 அணிகள் பங்கேற்ற நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 3 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்றது. கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. அதனைத்தொடர்ந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
குவாலிஃபயர் 1
இன்று மே 24 கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
எலிமினேட்டர்
நாளை மே-25ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
குவாலிஃபயர் 2
மே 27-ம் தேதி நடைபெறும் அகமதாபாத்தில் நடைபெறும் 2வது குவாலிஃபயரில், குவாலிஃபயர் 1-ன்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.
இறுதிப்போட்டி
மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் குவாலிஃபயரில் வென்ற அணியும், 2வது குவாலிபயரில் வென்ற அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் தற்போது கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு மழை வழிவிடுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அணிகளின் வெற்றி, தோல்வியை எப்படி முடிவு செய்வது? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிப்பட்டால், அந்த நாளில் கூடுதல் நேரத்துக்குள் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்றும் அதற்கு வழியில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் லீக் சுற்று புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்றதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
மேலும், இறுதிப்போட்டி பாதியில் தடைபட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் முந்தைய நாளில் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும். மாற்று நாளிலும் இறுதிப்போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு, சூப்பர் ஓவர் முறையும் கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் லீக் சுற்று புள்ளி பட்டியல் முன்னிலையை கணக்கில் கொண்டு சாம்பியன் யார்? என்பது தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
If the rain interrupts the IPL play-off round New rules announced