இந்தியா-வங்கதேசம் முதல் ஒருநாள் போட்டி.. கேட்ச்களை தவறவிட்ட இந்தியா.. வங்தேசம் த்ரில் வெற்றி.!
IND vs BAN 1st oneday international match Bangladesh won
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.
இதில், முதல் ஒரு நாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியில் கே எல் ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹாசன் 5 விக்கெட்களும், எட்பாட் ஹொசைன் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்தேச அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.
இதில் கடைசி விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த மெஹந்தி ஹாசன் - முஸ்பிசூர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றனர். இதில் கடைசி விக்கெட்க்கு 2 கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணியினர் தவற விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக வங்கதேச அணி 46 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
English Summary
IND vs BAN 1st oneday international match Bangladesh won