பதிலடி கொடுக்குமா இந்தியா.. இந்தியா-வங்கதேசம் 2வது ஒருநாள் போட்டி.. இந்தியா பௌலிங்.!
IND vs BAN 2nd oneday international match Bangladesh batting
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.
இதில் முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஷபாஷ் அகமது மற்றும் குல்தீப் சென் வெளியேற்றப்பட்டு அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுக்குமா? என ரசிகர்களால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், சொந்த மண்ணில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பில் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்;
இந்திய அணி 11 வீரர்கள் :
ரோஹித் சர்மா(கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(வ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
வங்காளதேசம் அணி 11 வீரர்கள் :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ்(கேட்ச்), அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(வ), மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
English Summary
IND vs BAN 2nd oneday international match Bangladesh batting