ஒமைக்ரான் எதிரொலி : இந்திய அணி பங்கேற்கும் தொடர் தள்ளிவைப்ப்பா? வெளியான பரபரப்பு தகவல்.!
IND vs SA Series
இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 17 -ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் துவங்குகிறது.
தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் 'ஒமைக்ரான்' கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என பல்வேறு தரப்பினரிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் வீரர்களின் நலன் கருதி, இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை இரண்டாக குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.