கேப்டன் ஆகிய ரோஹித், விராட்.! பதவியை இழந்த ரஹானே., இந்திய அணி அறிவிப்பு.!
IND vs SA Series Team India
இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 17 -ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் துவங்குகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித், ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ், விஹாரி, பண்ட், சஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த், சமி, உமேஷ், பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியை இழந்தார் ரஹானே இழந்துள்ளார். அதே சமயத்தில், டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
English Summary
IND vs SA Series Team India