உலக சாம்பியன்.. அர்ஜென்டினா அணியுடன் விளையாடும் வாய்ப்பை மறுத்த இந்தியா.. காரணம் என்ன.?
India reject football match against Argentina
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்தாண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணி தற்போது தெற்காசியாவில் உள்ள இரு அணிகளுடன் சர்வதேச நட்பு ரீதியான போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. அதில் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட விரும்பி இந்திய கால்பந்து கூட்டமைப்பை அணுகி உள்ளனர்.
ஆனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இதனை நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் தெரிவிக்கையில், அஜினீனாவுக்கு எதிரான போட்டியை நடத்த வேண்டுமானால் பெரும் தொகையை செலவழிக்க வேண்டும். மேலும் அதற்கு வலுவான ஸ்பான்சர்ஷிப் தேவை. அதேபோல், அர்ஜென்டினா அணிக்கான போட்டி கட்டணமும் (40 கோடி) மிக அதிகம்.
அந்த அளவிற்கு நிதி ஆதாரம் இல்லாததால் வாய்ப்பை தவிர்க்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி தனது இரண்டு நட்பு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா அணிக்கு எதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
English Summary
India reject football match against Argentina