இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு-பிசிசிஐ.!
India vs srilanka new schedule release by BCCI
இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது.
இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று டி20 போட்டிகள் (பிப்-16,18,20 தேதிகளில்) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.
அதன்படி,
முதல் டி20 - லக்னோ- பிப்ரவரி 24
2வது டி20 - தர்மசாலா - பிப்ரவரி 26
3வது டி20 - தரம்சாலா - பிப்ரவரி 27
முதல் டெஸ்ட் - மொகாலி - மார்ச் 4 to 8
2வது டெஸ்ட் - பெங்களூர் - மார்ச் 12 to 16
English Summary
India vs srilanka new schedule release by BCCI