அதிரடி காட்டிய ரோகித் ஷர்மா..இந்தியா அபார வெற்றி.!
India won by 6 wickets vs West Indies
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமானது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 57 ரன்களை எடுத்தார். இந்திய பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும், பிரசத் கிருஷ்ணா 2 விக்கெட்களையும், முகம்மது சிராஜ் 1 விக்கெட்டும்வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதனையடுத்து 28 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
English Summary
India won by 6 wickets vs West Indies