இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தி.. பயிற்சியில் ஈடுபட்டபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம்.!
Indian captain Rohit Sharma injured net practice
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அரையிறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர வலப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியனின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட ரோகித் சர்மா அதன் பின்னர் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால் அவருக்கு ஏற்பட்ட காயம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அரையிறுதி போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Indian captain Rohit Sharma injured net practice