இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்!
Indian cricket team head coach changed
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த சுற்று பயணத்தில் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இந்த தொடரில் டி20 போட்டிகள் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
அதேபோன்று மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார். அதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கு இந்தியனின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
இந்த தொடரில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்ற எட்டு வீரர்கள் நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை காண இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிடக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராகுல் டிராவிடக்கு பதில் நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் மீண்டும் செயல்பட உள்ளார். உலகக்கோப்பை தொடர்க்க முன்பு தென்னாப்பிரிக்கா உடனான தொடரில் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian cricket team head coach changed