இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி மறைவு! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி (வயது 83) உடல்நலக்குறைவால் மறைந்தார்.

திறமையான ஃபீல்டர் என்ற பெயர் பெற்ற அபித் அலி, 1967-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார்.

அதே டெஸ்ட் தொடரில், சிட்னியில் நடைபெற்ற போட்டியில், அவர் 78 மற்றும் 81 ரன்கள் விளாசி முக்கிய பங்கு வகித்தார்.

1967 முதல் 1974 வரை, இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 1,018 ரன்கள் குவித்ததோடு, 47 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

ஹைதராபாத்தில் பிறந்த அபித் அலி, கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தை பிடித்தவர்.

அவரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் (BCCI) மற்றும் கிரிக்கெட் வீரர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Cricketer Saiyad Abit Ali death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->