டாஸ்மாக் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்! அமலாக்கத்துறை அதிர்ச்சி அறிக்கை!
TASMAC 1000 cr scam ED DMK Govt
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) ரூ.1000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது என அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
மார்ச் 6-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பெருமளவில் ஆவணங்கள், பணம் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய முறைகேடுகள்:
பார் உரிமங்கள் வழங்கும் போது மோசடி நடந்துள்ளது.
அதற்கான ஒப்பந்தங்கள் முறைகேடாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களுக்கிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் மீட்கப்பட்டது.
முறைகேடு நடந்த முக்கிய நிறுவனங்கள்:
எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி உள்ளிட்ட முக்கிய மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டிலிங் நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
அமலாக்கத்துறை அறிக்கையின் அடிப்படையில், இம்மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
English Summary
TASMAC 1000 cr scam ED DMK Govt