சென்னையில் ஐபிஎல் ஆட்டங்கள் உண்டா? வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ipl 2022 no in chennai
15வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.
10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஐபிஎல் ஆட்டங்களை ஒரே இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஐந்து மைதானங்களில் இந்த ஐபிஎல் ஆட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட ஐந்து மைதானங்களில் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே சென்னையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
மேலும், உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அடுத்த வாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.