#IPL2023 : ராஜஸ்தான் 59 ரன்களுக்கு ஆல் அவுட்.. பெங்களூர் அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய டூப்லசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பம் முதலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 10.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பெங்களூர் அணி பிள்ளையார் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணியின் சிறப்பாக பதிவு செய்ய பார்னெல் 3 விக்கெட்டுகளும், கரண் சர்மா மற்றும் ப்ரேஸ்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 RCB won 112 runs against RR


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->