ஓய்வு எப்போது? சிஎஸ்கேக்காக இன்னும் எத்தனை வருடங்கள்? இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி!
IPL CSK MS Dhoni
43 வயதான தோனி, கடந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஆடியுள்ளார். அவர் கடைசி ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர்கள் அடிக்க என்றே காத்திருக்கின்றார்.
2023 சீசனில், அவரது தலைமையில் சிஎஸ்கே 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தோனி இதுவரை தனது ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. ஆனால், அவரது தற்போதைய பேச்சு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆன்மாவாக அவர் விளங்கி வருகிறார்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
"நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
தோனியின் ஓய்வு பற்றிய பேச்சுகள் வைரலாகும் நிலையில், ஜியோஹாட்ஸ்டார் நேர்காணலில் அவர் "நான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே என்னை களத்திற்கு இழுத்து கொண்டு வந்துவிடும்" என்று வேடிக்கையாக தெரிவித்தார்.