ஐபிஎல் மினி ஏலம் : மொத்தம் 991 பேர் பதிவு.. முழு பட்டியல்.!
IPL mini auction total 991 players registered
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.
இந்திய ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க மொத்தம் 991 பேர் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில், 741 பேர் இந்தியர்கள் மற்றும் 250 அயல்நாட்டை சேர்ந்தவர்களாவர். மொத்தம் 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பெற பதிவு செய்துள்ளனர்.
நாடுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை ;
ஆஸ்திரேலியாவில் - 57 வீரர்கள்
தென் ஆப்பிரிக்கா - 52 வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் - 33 வீரர்கள்
இங்கிலாந்து - 31 வீரர்கள்
நியூசிலாந்து - 27 வீரர்கள்
இலங்கை - 23 வீரர்கள்
ஆப்கானிஸ்தான் -14 வீரர்கள்
அயர்லாந்து - 8 வீரர்கள்
வங்கதேசம், ஜிம்பாப்வே, யுஏயில் -6 வீரர்கள்
நமிபியா - 5 வீரர்கள்
ஸ்காட்லாந்து - 2 வீரர்கள்
ஐபிஎல்லில் ஒரு அணி நிர்வாகத்தால் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரரகளை தவிர்த்து இன்னும் மொத்தமாக 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில், 57 பேர் இந்திய வீரர்கள், 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
English Summary
IPL mini auction total 991 players registered