ஐபிஎல் மினி ஏலம்.. இதுவரை எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் வாங்கியுள்ளது.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. 

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.  ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி வாங்கியுள்ளது.

 தற்போதைய வீரர்கள் ஏல விவரம்;

பெண் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

அஜின்க்யா ரகானே - 50 லட்சம் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சாம் கரண் - ரூ.18.5 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) 

ஹாரி ப்ரோக் - ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) 

 கேமரூன் கிரீன் - 17.5 கோடி ( மும்பை இந்தியன்ஸ்) 

நிக்கோலஸ் பூரான் - ரூ.16 கோடி (லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்)

மயாங்க் அகர்வால் - 8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

கேன் வில்லியம்சன் - 2 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)

அடில் ரஷித் - 2 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

இஷாந்த் ஷர்மா - 50 லட்சம் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)

ஜெய் ரிச்சர்ட்சன் - 1.5 கோடி (மும்பை இந்தியன்ஸ் )

உனத்கட் - 50 லட்சம் (லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்)

ரீஸ் டோப்ளே - 1.9 கோடி (பெங்களூர்)

பிலிப் சால்ட் - 2 கோடி (டெல்லி கேப்பிட்டல்ஸ்)

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction updates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->