மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்! நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் திடீர் விலகல்.!
Jacob Oram expelled from coach
குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதல், உலக கோப்பை போட்டி தொடரில் இருந்து நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் விலகியுள்ளார்.
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது உலக கோப்பை போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் ஆறாவது இடத்தில் நியூசிலாந்து மகளிரணி இருக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் திடீரென உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஜேக்கப் ஓரமின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சிகிச்சையில் உடனிருந்து உதவும் வகையில் உலக கோப்பை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பாப் கார்டர் தெரிவித்துள்ளார்.
குடும்பம் தான் முக்கியம் என்பதன் அடிப்படையில் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற ஜேக்கப் ஓரமின் முடிவை அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக பாப் கார்டர் தெரிவித்துள்ளார்.
English Summary
Jacob Oram expelled from coach