பிரிந்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தை ஒன்று சேர்க்க.. ஜெயவர்தனே வைத்து மும்பை போட்டுள்ள பிளான்.. வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இன்டியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை மெகா ஏலமாக இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. 

ஏனெனில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, புதிய வீரர்களை தக்கவைக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக, முன்னணி அணிகள் தங்களது முக்கிய வீரர்களை தக்கவைக்கவா அல்லது மாற்றவா என்பதை  பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவை சுற்றிய கேள்விகள் முக்கியமானதாக அமைந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்ற நிலையில், ரோகித் சர்மாவின் தலைமையிலான அந்த அணியில் கடுமையான மாற்றங்கள் கடந்த சீசனில் ஏற்பட்டன.

ரோகித் சர்மாவை கழற்றி, பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாண்டியாவை கேப்டனாக நியமித்ததைத் தொடர்ந்து, மும்பை அணி மிகவும் மோசமாக ஆடி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இதனால் மும்பை அணியில் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வெளிவந்தன. குறிப்பாக, பும்ரா போன்ற வீரர்கள் பாண்டியாவிடம் ஆலோசனை கேட்காமல் ரோகித் சர்மாவிடம் ஆலோசனை கேட்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மேலும், பாண்டியாவிடம் இருந்து பயிற்சியாளர் லசித் மலிங்காவின் இருக்கையை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்வது போன்ற வீடியோவும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த உட்பகைகள் மும்பை அணியின் ஒருமைப்பாடு மற்றும் வெற்றியை பாதித்தது.

அத்துடன், 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றமாக, முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே மீண்டும் அணி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2017-2022 காலகட்டங்களில் மும்பை அணிக்கு 3 கோப்பைகளை வென்று கொடுத்த ஜெயவர்தனே மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது மும்பை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஜெயவர்தனே தலைமையில் மும்பை அணிக்கு வெற்றி மீண்டும் கிடைக்கும், அதேபோல் அவர் அணியில் உள்ள பிரிவுகளை சரி செய்ய வல்லமை கொண்டவர் என்ற நம்பிக்கையில் மும்பை ரசிகர்கள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayawardene plan to bring the separated Mumbai Indians family together The announcement has been made


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->