மகேந்திரசிங் தோனி.... ஐ.பி.எல் ஓய்வு குறித்து மனம் திறந்தார்!!!
Mahendra Singh Dhoni opens up about IPL retirement
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் மகேந்திரச் சிங் தோனி. முதல் சீசனிலிருந்து சென்னை அணியின் கேப்டனாக ஐ.பி.எல் தொடரில் செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனைப்படுத்துள்ளார். தற்போது அவர் 43 வயது கடந்துள்ளார். இதனால் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சி.எஸ்.கே கேப்டன்ஷிப் பொறுப்பைக் கடந்த வருடமே ருதுராஜ் கையில் ஒப்படைத்துவிட்டு இவர்ச் சாதாரண ஒரு விக்கெட் கீப்பராக விளையாடினார். மேலும் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கிய தோனி, அவ்வாய்ப்பினைக் கைப்பற்றிக்கொண்டு அதிரடியாக விளையாடிய இறுதி ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஓய்வு குறித்து பேட்டி:
இவர் மேலும் ஐ.பி.எல் சீசனில் விளையாடுவார் என்று செய்தியைக் கேட்டவுடன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி பரவியது. தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் விளையாடி வரும் தோனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வு குறித்து பகிர்ந்து கொண்டார். இதில் அவர்க் கூறியதாவது, " 2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாகக் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வருகிறேன். இன்னும் சில வருடங்கள் மட்டுமே விளையாட முடியும் என்பது அனைவரும் அறிந்தவை.
இளம் பருவம்:
இனி வரும் தொடர்களில் நான் குழந்தையாகப் பள்ளிக்கூடத்தில் விளையாடுவது போல் விளையாட விரும்புகிறேன். இளம் பருவத்தில் நாம் தங்கி இருந்த காலணியில் தினமும் மாலை 4 மணி விளையாடுவதற்கான நேரம். அப்போது நாங்கள் விளையாட சென்று குறிப்பிட்ட நேரத்தை விட மிக அதிகமாக நேரத்தைச் செலவிட்டு கிரிக்கெட் விளையாடுவோம். இதற்கு வானிலை ஒத்துழைக்காவிட்டால் கால்பந்து விளையாடுவோம். அதேபோன்று அப்பாவித்தனமான கிரிக்கெட்டை நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். ஆனால் அது சொல்வதை விட மிகக் கடினம். ஒரு வீரராக நான் இப்போதும் இந்திய அணிக்காக நன்றாகவே விளையாட விரும்புகிறேன்.
கிரிக்கெட் :
ஏனென்றால், கடந்த காலங்களில் சொன்னது போல் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. எனக்கு நாட்டுக்காக விளையாடி வெல்வது மிக முக்கியமாகும்.அதற்கு சிறந்த வழியைக் கண்டறிந்து அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். எனக்குக் கிரிக்கெட் மட்டும் தான் அனைத்துமாக இருந்தது. அதற்காக நான் எப்போதும் தூங்குவது, எழுந்திருப்பது,என்ன தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதுவே நம் நண்பர்களுடனான மகிழ்ச்சியான விஷயங்கள் பின்னர் அமையும்" எனத் தெரிவித்திருந்தார்.
English Summary
Mahendra Singh Dhoni opens up about IPL retirement