காமன்வெல்த் தகுதி சுற்றில் இருந்து மேரிகோம் பாதியில் விலகல்.!! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி பேட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் ஹரியானாவின் நிதுவை எதிர்கொண்டார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிர் போட்டியலை குத்த முயற்சித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தா.ர் அதில் அவருக்கு இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் காமன்வெல்த் போட்டிக்கு மேரிகோம் இந்த முறை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mary kom halfway out of the commonwealth qualifying round


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->