அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன்.. குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி.!
Punjab kings beat by 8 wickets Gujarat Titans
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 62 ரன்களும், லிவிங்ஸ்டன் 30 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பானுகா ராஜபக்சே 40 ரன்கள் எடுத்தார்.
English Summary
Punjab kings beat by 8 wickets Gujarat Titans