பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி ..! கோலாகலமாக நடந்த நிகழ்ச்சி !!!
Prime Minister Modi inaugurated Pamban Suspension Bridge
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை நேரில் திறந்துவைப்பதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

அவ்வகையில் இன்று காலை, பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா ராம நவமி தினத்தையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு வந்து சேர்ந்தார்.
இதில் இலங்கை அனுராதபுரம் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.அங்கு பிரதமர் மோடியை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் நல்ல முறையில் வரவேற்றனர்.
பிறகு அங்கிருந்து, காரில் பிரதமர் மோடி புறப்படுகிறார்.இதைத்தொடர்ந்து,பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்தார்.
அதன் பிறகு, ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.இதில் புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிட்டார்.இது தற்போது சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
English Summary
Prime Minister Modi inaugurated Pamban Suspension Bridge