#IPL2022 : 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி.! - Seithipunal
Seithipunal


10 அணிகள் பங்கேற்ற நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்றது. கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறினர்.

எனவே பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும் இருந்தன.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் டெல்லி அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

எனவே புள்ளிகள் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக நுழைந்தது. இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal challengers Bangalore qualified playoffs IPL 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->