ரூ.1,25,00,00,000 பரிசு! இந்திய அணிக்கு இன்ப அதிர்ச்சி குடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

டி20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 2 வது முறையாக உலக கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு  டி20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இதனால் இந்திய அணிக்கு ஊக்கத்தொகையாக ரூ.125 கோடி வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சார்பில் ரூ. 20 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜெய்ஷா சமூக வலைத்தள பக்கம் பதிவிட்டுள்ளதாவது, 2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இந்திய அணி தொடர் முழுவதும் தங்களது அசாத்தியமான திறமை, அர்ப்பணிப்பு,விளையாட்டு கூறிய உத்வேகத்தை வெளிப்படுத்தியது. அணியில் இடம் பெற்ற வீரர்கள் , பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs125 crore prize for Indian team Indian Cricket Board


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->