குஷி!!!ரூ.58 கோடி பரிசா!!! சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணி ....!!!
Rs58 crore prize money Indian team crowned Champions Trophy
Icc சாம்பியன்ஸ் டிராபி2025 போட்டிகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்தது. துபாயில் இதன் இறுதிப்போட்டி கடந்த மார்ச் 9ம் தேதி நடந்தது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.

சிறப்பாக விளையாடி இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது. இறுதி தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவிற்கும் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 2002ம் ஆண்டு நடிந்த இந்தியா, இலங்கைக்கு சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொடுத்தாலும், தோனிக்குப் பிறகு கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.
வெற்றிக்கோப்பையுடன், ரூ. 20 கோடி பரிசுடன் இந்திய அணி இந்தியா திரும்பியது. இந்நிலையில், ரூ.58 கோடி பரிசுத்தொகையை சாம்பியன் டிராபி தொடரை வென்ற அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்களுக்கு BCCI அறிவித்துள்ளது.
இந்த தொகை போட்டியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Rs58 crore prize money Indian team crowned Champions Trophy