விராட் கோலிக்காக உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் - முன்னாள் வீரர் ஷேவாக்.! - Seithipunal
Seithipunal


2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இதில் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியிட்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர ஷேவாக் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 2011 உலக கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்காக வென்று கொடுத்தோம். தற்போது விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் இடத்தில் உள்ளார்.

அந்த வகையில் விராட் கோலி விளையாடும் விதம், பேசும் விதம் மற்ற வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் என கிரிக்கெட் விளையாடுவது சிறப்பாக உள்ளது. அதனால் விராட் கோலிக்காக இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த உலகக் கோப்பை போட்டி கடுமையாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். அந்த வகையில் அவர் இந்த உலகக் கோப்பை குறித்து பேசும் போது, இந்த உலகக் கோப்பை மிகவும் கடும் போட்டியாக அமையும் எனவும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் பல சுவாரசியமான சம்பவங்களும் இந்த தொடரில் நடக்கும். நாங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம். அக்டோபர் மற்றும் நவம்பரில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற முயற்சி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shewag wish to win world Cup for Virat Kohli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->