#BREAKING | 76 ரன்களுக்கு ஆல்-அவுட்! மிக மோசமான படுதோல்வியை சந்தித்த ஸ்ரீலங்கா!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, ஏற்கனவே டெஸ்ட் தொடரில் விளையாடி 2-0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், இன்று நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி களம் இறங்கிய நியூஸ்லாந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 274 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் பின் அலென் 51 ரன்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணி பந்துவீச்சை பொறுத்தவரை சமைக்கா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பமே தடுமாறியது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து, 76 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SL Vs NZ first ODI Match Result 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->