பாக். எதிரான போட்டிகள் பங்கேற்பாரா சுப்மன் கில்? மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்காத கில் நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு ரத்த தட்டுக்கள் குறைந்ததால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல் போட்டியில் பங்கேற்காத கில் நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வரும் சனிக்கிழமை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சல் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் கில் இல்லாத சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்கிய இஷான் கிஷன் நாளை நடைபெறும் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில் இந்திய அணியுடன் டெல்லிக்கு செல்லாத நிலையில் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே தான் நேற்று மாலை சுப்மன் கில் உடலில் ரத்த தட்டுக்கள் குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அந்த அவர் தற்போது ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுப்மன் கில் ஓரிரு நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியில் சுப்மன் கில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subman Gill discharged from kauvery Hospital in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->