வங்கத்தின் வெற்றியை பறித்த கேஷவ் மஹராஜ்! கொண்டாடும் ரசிகர்கள்!
T20 World Cup SAvsBAN South Africa Bangladesh
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க. அடுத்த சில ஓவர்களில் குவிண்டன் டிகாக் 18 ரன்னிலும், மார்க்ரம் 4, ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
பின்னர் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆட, 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ரன் எடுக்க முடியாமல் முறையே 9 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் ஜோடியும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழக்க, தவ்ஹித் மற்றும் மஹ்மதுல்லா ஜோடி நிதானமாக ஆடி முறையே 37 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேசவ் மகராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றி 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 109 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியல் :
English Summary
T20 World Cup SAvsBAN South Africa Bangladesh