ஐந்தாவது உலகக்கோப்பையில் விளையாட போகும் இரண்டே வீரர்கள்! யார் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்னும் சில தினங்களில், ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியானது தொடங்க இருக்கும் நிலையில், உலககோப்பை போட்டியில் வித்தியாசமாக படைக்கப்பட்ட  சாதனைகளைப் பற்றி நாம் பேசி வருகின்றோம். அவ்வாறான சாதனை ஒன்றைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்க இருக்கின்றோம். 

ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும், நாட்டிற்காக ஒரு உலகக்கோப்பையாவது விளையாடிட வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். சில வீரர்கள் 100 சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகும் கூட உலகக்கோப்பை ஆடமுடியாமல் போன சோகங்களும் உண்டு. ஆனால் மறுபுறம் சில வீரர்கள் தங்களது நீடித்த திறமையினாலும், உடற்தகுதியாலும் பல உலகக்கோப்பை போட்டிகளை ஆடியிருக்கிறார்கள்.  

அவர்களை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். ஒரு வீரர் ஆறு உலகக் கோப்பையில் விளையாடி இருக்கிறார் என்றால் அந்த அணிக்காக அவர் எவ்வளவு நாட்கள் ஆடி இருக்க வேண்டும், சுமார் 21 வருடங்கள் முதல் 24 வருடங்களை அவர்கள் ஆடியிருக்க வேண்டும். இதுவரை இரண்டு வீரர்களால் மட்டுமே ஒரு நாட்டிற்காக 6 உலக கோப்பைகள் விளையாடப்பட்டிருக்கின்றன. 

முதலாவதாக பாகிஸ்தானை சார்ந்த ஜாவீத் மியாண்டட் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை முதல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ச்சியாக அவர் ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்ற வீரராக இருக்கிறார்.  அவருக்க அடுத்த இடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவில் 1992 இல் நடைபெற்ற ஐந்தாவது உலகக் கோப்பை முதல் 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பத்தாவது உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக ஆறு உலகக் கோப்பையில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், இவர்கள் இருவருக்கு பின்னர் வேறு யாரும் 6 உலக கோப்பையில் விளையாடவில்லை. இதற்கு மேல் விளையாடவும் வாய்ப்பும் இல்லை. 

இவர்களை அடுத்து ஐந்து உலகக் கோப்பைகளை விளையாடிய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இதில் முதல் வீரராக பாகிஸ்தானை சார்ந்த ஆல்ரவுண்டர் இம்ரான் கான் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் இருந்து 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது  உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக ஆடியிருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக இலங்கையின் அர்ஜுனா  ரணதுங்கா 1983 முதல் 1999 வரையிலும், 1987 முதல் 2003 வரையில் இலங்கையின் அரவிந்த டி செல்வா, பாகிஸ்தானின் வசிம் அக்ரம் ஆடியிருக்கிறார்கள். 

அடுத்தபடியாக 1992 முதல் 2007 வரை 5 உலக கோப்பைகளில் 3 வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகிய மூன்று பேரும் ஐந்து உலக கோப்பை விளையாடியிருக்கிறார்கள். 

அதற்கடுத்தபடியாக 1996 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில் ஆறு வீரர்கள் தொடர்ச்சியாக 5 உலக கோப்பையை விளையாடிய வீரராக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணியின் ரிக்கி பாண்டிங், தென்னாபிரிக்க அணியின் ஜாக் காலிஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷிவ்நரைன் சந்திர பால், இலங்கையின் முத்தையா முரளிதரன் இவர்களுடன் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கென்யா நாட்டின் இரண்டு வீரர்கள் விளையாடியிருப்பது வியப்பாகவே இருக்கிறது. கென்யாவின் ஸ்டீவ் டிகோலோ, தாமஸ் ஓடாயோ ஆகியோரும் ஐந்து உலகக் கோப்பைகளை விளையாடி இருக்கிறார்கள். 

1999 முதல் 2015 வரை 5 உலக கோப்பை விளையாடியவர்கள் பட்டியலில் இருவர் இடம்பெற்று இருக்கிறார்கள். இலங்கையின் மமகிளா ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். 2003 முதல் 2019 வரையில் 5 உலக கோப்பை விளையாடிய ஒரே வீரராக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் இடம்பெற்று இருக்கிறார். 

உலகின் சிறந்த வீரர்கள் இடம்பிடித்த இந்த பட்டியலில், நடப்பு உலக கோப்பையில் ஐந்தாவது உலக கோப்பை விளையாடும் வீரர்கள் இருவர் இடம் பெற இருக்கிறார்கள். அவர்கள் முன்னணி அணிகள் எல்லாம் இல்லை, வங்கதேசம் அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் தான் ஐந்தாவது உலக கோப்பை விளையாட இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் 2007 முதல் தற்போது வரை உலக கோப்பை விளையாடி வருகிறார்கள். இவர்களுடன் ஐந்தாவது உலக கோப்பை ஆட வேண்டிய வீரரான தமிழ் இக்பால் உடற்தகுதி மற்றும் அணியில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக விலகி விட்டதால் அரிய வாய்ப்பை அவர் இழந்திருக்கிறார். 

தற்போதைய இந்திய வீரர்களில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி நான்காவது உலக்கோப்பையை தான் விளையாட இருக்கிறார். அதே சமயம் அவருடன் 2011 இல் ஆடிய அஸ்வின் நடப்பு தொடரில் ஆடினாலும் அவருக்கு மூன்றாவது உலகக்கோப்பை தான். ஏனெனில் அவர் 2019 ஆண்டு தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two players will be playing 5th world cup, do you know who is who?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->