எனக்கு நீங்க எல்லா காலத்திலும் பெரியவர்..!! கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோவுக்கு விராட் கோலி ஆறுதல்..!!
Virat Kohli consoles Cristiano Ronaldo who left in tears
2022ம் ஆண்டிற்கான பிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில் லீக் போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் தலா இரண்டு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாக் அவுட் சுற்றில் முடிவில் காலிறதி சுற்றுக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், மற்றும் மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
கடந்த 10ம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் நடைபெற்ற முதல் கால் இறுதிப் போட்டியில் மொராக்கோ - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. நாக் அவுட் சுற்று முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் மொரக்கோ அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்.
அவர் கண்ணீருடன் வெளியேறியது கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் "கால்பந்தாட்ட விளையாட்டிலும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த கோப்பையும், பட்டமும் என எதையும் பறிக்க முடியாது. மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலர் என்ன உணர்கிறோம் என்பதையும் எதை கொண்டும் விளக்க முடியாது.
அது கடவுள் கொடுத்த வரம். ஒவ்வொரு முறையும் தனது இதயத்தை வெளிப்படுத்தும் ஒரு மனிதனுக்கு ஒரு உண்மையான ஆசீர்வாதம் என்பது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சுருக்கம். இது எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் உண்மையான உத்வேகம். நீங்கள் எனக்கு எல்லா காலத்திலும் பெரியவர்" என ஆறுதல் கூறியுள்ளார்.
English Summary
Virat Kohli consoles Cristiano Ronaldo who left in tears