#T20WorldCup : இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் புதிய சாதனை படைப்பாரா கோலி.?  - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


 
அதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி 42 ரன்கள் எடுத்தால் சர்வேச டி20 போட்டிகளில் 4,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை 106 இன்னிங்ஸில் 3,958 ரன்கள் எடுத்ததுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 5 போட்டிகளில் 246 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முக்கிய விரராக விராட் கோலி கருதப்படுகிறார்.

மேலும், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அடிலெய்டு மைதானத்தில் இந்திய வீரர் விராட் கோலி 14 இன்னிங்ஸில் 907 ரன்களை குவித்துள்ளார். இந்த மைதானத்தில் விராட் கோலியின் சராசரி 75.58 என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli needs 42 runs to reach 4000 runs in T20 cricket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->