IND vs SA: ஒருநாள் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா.? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்.!!
virat kohli play for odi match against sa
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கேப்டன் கோலி இன்னும் அணியில் இணையவில்லை. இதனிடையே, துணை கேப்டன் ரோகித் சர்மா தொடைப்பகுதி தசைப்பிடிப்பு காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஒருநாள் போட்டிக்கு முன்பு காயம் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி இன்று டெஸ்ட் அணியில் இணைவார் என கூறப்படுகிறது.
இதனிடையே விராட்கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியானது. அவரது மகள் வாமிகாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒருநாள் போட்டியில் நடைபெறும் சமயத்தில் சுற்றுலா செல்ல முடிவு செய்து உள்ளார். இதனால்தான் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ முக்கிய நிர்வாகி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, விராட் கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவலில் உண்மையில்லை. அவர் பங்கேற்பு குறித்து தேவை இல்லாமல் சந்தேகப்படக் தேவையில்லை. இதன் மூலம் கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
English Summary
virat kohli play for odi match against sa